மனநலம் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு

நெல்லையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Update: 2023-02-13 20:37 GMT

கேரளா மாநிலம் வென்ஜராமூடு பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் (வயது 45). மாற்று திறனாளியான இவர் மனம் நலம் பாதிக்கப்பட்டு சுற்றி வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு இவர் திடீரென்று காணாமல் போனார். அதுகுறித்து வென்ஜராமூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டை மகாராஜநகர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவரை மீட்டு சிகிச்சை அளித்து பராமரித்து வந்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு அவர் கேரளாவில் காணாமல் போன அபிலாஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அவருடைய சகோதரர் குடும்பத்தினர் நெல்லைக்கு வந்தனர். அவர்களிடம் அபிலாஷை, கலெக்டர் கார்த்திகேயன் ஒப்படைத்து, கேரளாவுக்கு வழிஅனுப்பி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்