தனியாக தவித்த சிறுவன் உறவினரிடம் ஒப்படைப்பு
தனியாக தவித்த சிறுவன் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் பூக்கடை நடத்தி வரும் தர்மராஜ் என்பவரது மகன் பிரேம்(வயது 4). இந்த சிறுவன் சன்னதி தெருவில் ஒரு காபி கடை முன்பு நீண்ட நேரமாக தனியாக நின்று, அழுது கொண்டிருந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தகவல் அறிந்த போலீஸ்காரர் விஜயகுமார் சிறுவனை மீட்டு அவரது பாட்டியிடம் ஒப்படைத்தார். சிறுவனை பாதுகாப்பாக மீட்டு அவரது பாட்டியிடம் ஒப்படைத்த விஜயகுமாரை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.