அரசு அருங்காட்சியகத்தில் மான் கொம்புகள் ஒப்படைப்பு

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மான் கொம்புகள் ஒப்படைக்கப்பட்டன.

Update: 2022-10-18 20:40 GMT

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் பாளையங்கோட்டை மகாராஜா நகர் பகுதியை சேர்ந்த வங்கி ஓய்வுபெற்ற ஊழியர் அழகப்பன் என்பவர் தனது வீட்டில் இருந்த 3 மான் கொம்புகளை நெல்லை அரசு அருங்காட்சியகத்துக்கு நேற்று அன்பளிப்பாக வழங்கினார். அதைப் பற்றி அவர் கூறுகையில், "தனது தாத்தா அழகப்பபிள்ளை முன்னாள் திருவுதாங்கூர் மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். அவரிடம் இருந்து பெறப்பட்ட இந்த மான் கொம்புகளை வரலாற்று சிறப்புமிக்க நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் அன்பளிப்பாக ஒப்படைப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்" என்றார்.

இதுபோன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்கள் தங்கள் முன்னோர் பயன்படுத்திய அரும் பொருட்களை அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக தந்தால் அப்பொருட்களை அடுத்த தலைமுறையினர் பார்வையிட ஏற்றவாறு காட்சிப்படுத்தப்படும் என்று நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்