பெண்களுக்கு கைத்தறி திறன் மேம்பாட்டு பயிற்சி
பரமக்குடியில் பெண்களுக்கு கைத்தறி திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.;
பரமக்குடி,
பரமக்குடி-எமனேஸ்வரம் பகுதிகளில் வசிக்கும் கைத்தறி நெசவாளர் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நபார்டு வங்கி உதவியுடன் பெண்கள் நல அறக்கட்டளை இணைந்து 15 நாட்களுக்கான பயிற்சி நடந்தது. அதில் கைத்தறி நெசவுத்துறையில் புதுமையான தொழில்நுட்பம் சந்தைப்படுத்துதல், கை எம்பிராய்டரி பயிற்சி, மற்றும் புதிய வடிவமைப்பு தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட்டது. இதற்கு நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் விஜிலன், பெண்கள் நல அறக்கட்டளை தலைவர் கல்யாணி கார்த்திகேயன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இதில் 180 பெண்கள் கலந்து கொண்டனர்.