நாமக்கல்லில் கைத்தறித்துறை சார்பில் கைத்தறி கண்காட்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாமக்கல்லில் கைத்தறித்துறை சார்பில் அமைக்கப்பட்ட கைத்தறி கண்காட்சியை கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தொடங்கி வைத்தார்.

Update: 2022-08-07 09:09 GMT

நாமக்கல்,

நாமக்க நகராட்சி மண்டபத்தில் கைத்தறி துறை சார்பில் கைத்தறி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

நாமக்கல் மாவட்டம், சங்ககிரி, எடப்பாடி பகுதியை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் துணிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

45 அரங்குகள் அமைக்கப்பட்டு பட்டுசேலை, காட்டன் சேலைகள், வேட்டிகள், போர்வைகள், ஜமக்காலம், துண்டு, சால்வை, கால் மிதியடிகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சி இன்று மாலை 6 மணி வரை நடைபெற உள்ளன. கைத்தறித்துறை திருச்செங்கோடு சரக உதவி இயக்குநர் செந்தில்குமார் , கைத்தறி அலுவலர்கள் பூபதி, அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்