கோவில் ஊழியர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தொடர் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து கோவில் ஊழியர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Update: 2023-01-20 21:54 GMT

நெல்லை அருகே உள்ள மேலசெவல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்ற கிட்டுச்சாமி (வயது 55). கோவில் ஊழியரான இவரை ஒரு கும்பல் கடந்த 15-ந்தேதி வெட்டி கொலை செய்தது. இச்சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். இதற்கிடையே உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் 5 நாட்களாக நடந்த போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. போலீசார் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து கிருஷ்ணன் உடலை போலீசார் அவரின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்