சாலையில் கிடந்த ரூ.15 ஆயிரம் போலீசாரிடம் ஒப்படைப்பு

கண்டாச்சிபுரம் அருகே சாலையில் கிடந்த ரூ.15 ஆயிரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.;

Update: 2023-06-16 18:45 GMT

திருக்கோவிலூர்,

விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 53). இவர் கண்டாச்சிபுரம் அடுத்த பம்பகரையில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வடிவேல், டாஸ்மாக் பார் முன்பு சாலையில் ரூ.15 ஆயிரம் கிடப்பதை பார்த்தார். உடனே அவர் அந்த பணத்தை எடுத்துச்சென்று கண்டாச்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருபரனிடம் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் பணத்தை தவற விட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வடிவேலின் இத்தகைய நற்செயலை போலீசார் வெகுவாக பாராட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்