உடனுக்குடன் ஊதியம் வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை திட்டத்தில் உடனுக்குடன் ஊதியம் வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை உடனே வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க சீர்காழி நகர செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் நாகராஜன், மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் பாரதிராஜா வரவேற்றார். ஒன்றிய பொருளாளர் இளங்கோவன், மாவட்ட குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி ஆகியோர் 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை உடனுக்குடன் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் இந்த ஆண்டு நிதியை குறைத்த மத்திய அரசை கண்டித்தும் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொருளாளர் கொளஞ்சியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.