மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-15 19:15 GMT

சீர்காழி;

சீர்காழி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். கொள்ளிடம் ஒன்றிய பொருளாளர் கொளஞ்சியப்பன், சீர்காழி ஒன்றிய பொருளாளர் இளங்கோவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைத்து அரசின் சலுகைகளையும் பெற வசதியாக கொள்ளிடம், சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இ சேவை மையம் அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும். சீர்காழி தாலுகா அலுவலகம் மற்றும் பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளம் அமைத்து தர வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலையில் நீல நிற அட்டை வழங்கி ரூ.294 ஊதியம் வழங்க வேண்டும். போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, கொள்ளிடம் ஒன்றிய தலைவர் குமார் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்