மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு

பாளையங்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு நடந்தது.

Update: 2022-07-02 19:40 GMT

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நெல்லை 4-வது மாவட்ட மாநாடு நேற்று பாளையங்கோட்டையில் நடந்தது. நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஓய்வு பெற்ற டீன் டாக்டர் ராமகுரு தலைமை தாங்கினார். சங்கத்தின் துணைத்தலைவர் தியாகராஜன் முன்னிலை வைத்தார். மாவட்ட செயலாளர் குமாரசுவாமி வரவேற்று பேசினார். மாநில செயலாளர் வில்சன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன், மாநகராட்சி கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மாலையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற பேரணி நடந்தது. பேரணியை சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் தியாகராஜன் தொடங்கி வைத்தார். பேரணி பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் இருந்து தொடங்கி மாநகராட்சி திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்