பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடக்கம்

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கியது.

Update: 2022-12-15 17:29 GMT

தமிழகம் முழுவதும் நேற்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அரையாண்டு தேர்வு தொடங்கியது. முதல் நாளான நேற்று 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தமிழ் பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடந்தது. இதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசிக்கவும், அடுத்து 5 நிமிடங்கள் விடைத்தாளை சரிபார்க்கவும் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதற்காக அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தன. இதையொட்டி மாணவ-மாணவிகள் காலை 9 மணிக்கே பள்ளிக்கு வந்தனர்.

தேர்வுக்கு முன்பு பெரும்பாலான பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு கூட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின்னரே மாணவ-மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர். இதற்கிடையே இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு 6 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும், மதியம் 1.45 மணிக்கு 7-ம் வகுப்புக்கும் தமிழ் பாடத்துக்கான தேர்வு தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்