ஹஜ் பயணம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஹஜ் பயண மேற்கொள்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.;

Update:2024-09-11 00:26 IST

கோப்புப்படம்

சென்னை,

ஹஜ் எனும் புனித பயணம் இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாகும். அனைத்து இஸ்லாமியர்களும் ஒரு முறையாவது இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் மெக்காவிற்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியை 23.9.2024 வரை இந்திய ஹஜ் குழு நீட்டித்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை, இந்திய ஹஜ் குழு இணையதளம் www.hajcommittee.gov.in வழியாக அல்லது செல்போனில் 'ஹஜ் சுவிதா' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம்.

இதில் கூடுதல் விவரங்கள் அறிய, இந்திய ஹஜ் குழு இணையதள முகவரியான www.hajcommittee.gov.in என்ற இணையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்