கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளியில் மாணவர்களுக்கு முடி திருத்தம்

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளியில் மாணவர்களுக்கு முடிதிருத்தும் பணி நடைபெற்றது.;

Update: 2022-06-30 06:29 GMT

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 1,300 மாணவிகள் உள்பட மொத்தம் 3 ஆயிரம் மாணவ-மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். மாணவர்கள் சீரான முடிதிருத்தத்துடனும், உடையுடனும் பள்ளிக்கு வருமாறு ஆசிரியர்கள் தினமும் வலியுறுத்தி வந்தாலும் ஒரு சில மாணவர்கள் தங்களது முடி அலங்காரத்தை மாற்றி கொள்ளாமல் ஸ்டைலாக வைத்திருந்தனர்.

இதனையடுத்து தலைமையாசிரியர் அய்யப்பன், ஒவ்வொரு வகுப்புகளுக்கும் சென்று சரி வர முடி வெட்டாமல் நீளமாக வளர்த்திருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை தேர்வு செய்தார். அவர்களது பெற்றோர்களிடம் செல்போனில் ஒப்புதல் பெற்று அவர்களுக்காக பள்ளி மைதானத்தையொட்டிய மரத்தடியில் தற்காலிக முடிதிருத்தும் நிலையம் அமைக்கப்பட்டது. சிகை அலங்கார நிபுணர் வரவழைக்கப்பட்டு இத்தகைய மாணவர்களுக்கு முடிதிருத்தும் பணி நேற்று நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்