முடி காணிக்கை உரிமம் ரூ.9 லட்சத்துக்கு ஏலம்

வள்ளிமலை கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி முடி காணிக்கை உரிமம் ரூ.9 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

Update: 2023-07-25 18:27 GMT

காட்பாடி தாலுகா வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா வருகிற 8,9-ந் தேதிகளில் நடக்கிறது. அன்று பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். இதனை முன்னிட்டு நேற்று செயல் அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் வள்ளி மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தற்காலிக கடைகள் மற்றும் முடி காணிக்கை ஏலம் விடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர்.

இதில் முடி காணிக்கை உரிமம் ரூ.9 லட்சத்துக்கு ஏலம் போனது. 75 தற்காலிக கடைகள் ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது. இதில் ஆய்வாளர் சுரேஷ் முன்னிலை வகித்து ஏலத்தை நடத்தினார். இந்த நிலையில் ஆடிக்கிருத்திகையையொட்டி பக்தர்களுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து இன்று (புதன்கிழமை) மாலை 4 மணி அளவில் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்