விவசாயிகளுக்கு மானிய விலையில் ஜிப்சம்
விவசாயிகளுக்கு மானிய விலையில் ஜிப்சம் வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத் துறையின் மூலம் உழவர் பெருமக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களில் ஒன்றான மாநில அரசு வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2022-23 கீழ் ஒரு ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதன் முழுவிலை ரூ.700, மானியம் ரூ.250 போக மீதம் ரூ.450 செலுத்தி ஏக்கருக்கு 200 கிலோ வீதம் ஜிப்சம் பெற்று விவசாயிகள் பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் உதவி அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.