குத்தகை தொகை செலுத்தாததால் ஜிம்கானா கிளப்புக்கு 'சீல்'-அதிகாரிகள் நடவடிக்கை

குத்தகை தொகை செலுத்தாததால் ஜிம்கானா கிளப்புக்கு 'சீல்' வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2023-07-03 18:45 GMT

குன்னூர்

குத்தகை தொகை செலுத்தாததால் ஜிம்கானா கிளப்புக்கு 'சீல்' வைத்து அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்தனர்.

ஜிம்கானா கிளப்

குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரி அருகே தனியாருக்கு சொந்தமான ஜிம்கானா கிளப் செயல்பட்டு வந்தது. சுமார் 99 ஆண்டு காலம் பழமை வாய்ந்த இந்த கிளப் உள்ள நிலம் டிபென்ஸ் எஸ்டேட்டிற்கு சொந்தமானது. இந்த நிலத்தில்தான் குத்தகைக்கு எடுத்து ஜிம்கானா கிளப்பை நடத்தி வந்தனர். இங்கு கிளப்பில் பொழுதுபோக்கு அம்சங்களான கால்ப், டென்னிஸ் மற்றும் தங்கும் விடுதிகள், மது பார் உள்ளிட்டவை செயல்பட்டு வந்தது.இங்கு ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள், மற்றும் குடும்பத்தினர் வந்து மனமகிழ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று செல்வர். மேலும், ராணுவ ஹெலிகாப்டர்கள் ஜிம்கானா மைதானத்தில் தரை இறக்கப்படும்.

சீல் வைப்பு

சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வந்த இந்த கிளப்பின் 99 ஆண்டு கால குத்தகை தற்போது முடிவடைந்து உள்ளது. இதனை தொடர்ந்து 3 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் கிளப் நிர்வாகம் குத்தகை பணம் செலுத்தவில்லை. இந்த நிலையில், சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள், வெலிங்டன் கண்டோன்மென்ட் அதிகாரிகள், ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஜிம்கானா கிளப்பிற்கு சென்று ஒவ்வொரு அறைகளையும் பூட்டி சீல் வைத்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்