குட்கா விற்ற மளிகைக்கடைக்கு சீல்

கேத்தாண்டபட்டி பகுதியில் குட்கா விற்ற மளிகைக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2022-08-27 18:51 GMT

ஜோலார்பேட்டை

கேத்தாண்டபட்டி பகுதியில் குட்கா விற்ற மளிகைக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

ஜோலார்பேட்டையை அடுத்த கேத்தாண்டபட்டி பகுதியில நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கேத்தாண்டப்பட்டி ராஜவீதி பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கடையில் குட்கா விற்ற கேத்தாண்டப்பட்டி ராஜவீதி பகுதியைச் சேர்ந்த குப்பன் மகன் சத்தியமூர்த்தியை (வயது 45) அவர்கள் கைது செய்து 30 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்த மளிகை கடைக்கு தாசில்தார் முன்னிலையில் வருவாய் துறையினர் 'சீல்' வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்