கடலூா் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்ற மேலும் 14 பேர் கைது
கடலூா் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்ற மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டனா்.
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்வோரை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை செய்து, குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இந்நிைலயில் நேற்று முன்தினம் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 290 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். லாட்டரி சீட்டு விற்ற கூத்தப்பாக்கத்தை சேர்ந்த ராஜகுரு (வயது 50) என்பவரை கைது செய்தனர். மேலும் குட்கா விற்பனை செய்த 9 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 343 கிலோ 400 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர்.