குட்கா விற்ற வியாபாரி கைது

ஜோலார்பேட்டை அருகே குட்கா விற்ற வியாபாரி கைது செய்யப்பட்டார். அவருடைய கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2022-10-09 16:10 GMT

ஜோலார்பேட்டை பகுதியில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அரசு மற்றும் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி ஊராட்சியில் உள்ள அன்பழகன் நகர் பகுதியில் கடைகளில் சோதனை ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தபரேஷ் (வயது 40) என்பவர் தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விமல் பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து அந்த கடைக்கு தாசில்தார் க.குமார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்