கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு காரில் கடத்த முயன்ற 323 கிலோ குட்கா பறிமுதல் டிரைவர் உள்பட 2 பேர் கைது
கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு காரில் கடத்த முயன்ற 323 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு காரில் கடத்த முயன்ற 323 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குட்கா கடத்தல்
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானகன் ரகுநாதன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அதில் 323 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் கார் டிரைவர் மற்றும் உடன் வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த டிரைவர் திருவேங்கடம் (வயது 38), திருவள்ளூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் (33) என்பது தெரியவந்தது.
2 பேர் கைது
இவர்கள் பெங்களூருவில் இருந்து குட்காவை சென்னைக்கு கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் ரூ.2 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான குட்கா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.