சுந்தரமூர்த்தி நாயனாருக்கு குருபூஜை
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு குருபூஜை நடைபெற்றது.;
ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பெரியநாயகி உடனுறை கழுமலைநாதர் கோவிலில் உள்ள சுந்தரமூர்த்தி நாயனாருக்கு குருபூஜை நடைபெற்றது. இதையொட்டி அப்பர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி ஆகியோருக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் திருவாசகம் பாடல்களை பாடி கோவில் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக சென்று சுவாமியை வழிபட்டனர்.