மாணிக்கவாசகர் குருபூஜை விழா

மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது.

Update: 2022-07-03 17:20 GMT


ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் மங்களநாதர் மங்களநாயகி அம்மன் எழுந்தருளி உள்ளனர். இந்த கோவிலில் மாணிக்கவாசகருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் மாணிக்கவாசகரின் குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி நேற்று மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவையொட்டி மாணிக்க வாசகருக்கு 16 வகையான அபிஷேக, ஆராதனை நடை பெற்றது. விழாவில், திருவாசகம், பொன்னூஞ்சல், சிவ புராணம், பாராயணம், நாமாவளி, பஜனை உள்ளிட்டவை பாடப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் தலைமையில் நிர்வாகத்தினர், ராமகிருஷ்ண சேவா மந்திர் தலைவர் சிவராம் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்