குண்டுகுளம் கிராமத்தில் ரூ.14¾ லட்சத்தில் ஆழ்துளை கிணறு
குண்டுகுளம் கிராமத்தில் ரூ.14¾ லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.;
கமுதி,
கமுதி அருகே கே.வேப்பங்குளம் ஊராட்சியில் குண்டுகுளம், வண்ணாங்குளம், கே.வேப்பங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருவதாக புகார் எழுந்தது. இதனால் குண்டுகுளம் கிராமத்தில் பொதுமக்களே வீடு வீடாக வரி வசூல் செய்து, ஊருணியை ரூ.10 லட்சம் செலவில் தூர்வாரி, வரும் மழைக் காலத்தில் மழை நீரை சேமித்து குடிநீராக பயன்படுத்த ஏற்பாடு செய்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் நேரில் சென்று கிராம மக்களிடம் குடிநீர் பிரச்சினை குறித்து கேட்டறிந்தார். பின்னர் நாராயணக்காவரி கால்வாய் அருகே ரூ.14.77 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து, குழாய் மூலம் குண்டுகுளம் கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு வர ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கிராமத்திற்குள் காலை, மாலை வேளைகளில் அரசு பஸ்கள் உள்ளே வந்து செல்ல ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமேகலை, சங்கரபாண்டியன் (கிராம ஊராட்சிகள்), கமுதி வட்டாட்சியர் சேதுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.