4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கீழ்வேளூர் அருகே வீட்டுக்கு தீ வைப்பு மற்றும் அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-06-12 17:19 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே வீட்டுக்கு தீ வைப்பு மற்றும் அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

வீட்டுக்கு தீ வைப்பு-அரிவாள் வெட்டு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடி கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி அன்று வீட்டுக்கு தீ வைப்பு, மோட்டார் சைக்கிள் எரிப்பு, அரிவாள் வெட்டு சம்பவம் நடந்தது.இதுதொடர்பாக கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருக்கண்ணங்குடி சின்ன முக்கால்வட்டம், காளமேகம் மகன் ஹரிகரன்(வயது 27), தனுஷ்கோடி மகன்கள் தமிழ்மாறன்(23), தனராஜ் (21), திருக்கண்ணங்குடி தெற்கு தெருவை சேர்ந்த சந்திரசேகரன் மகன் குருபாலன்(23) ஆகிய 4 பேர் மீது ஆயுத தடுப்பு சட்டம், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்த போலீசார் நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்தநிலையில் இவர்கள் 4 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ்க்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.இதனைத்தொடர்ந்து 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை கீழ்வேளூர் போலீசார், நாகை மாவட்ட சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். பின்னர் குண்டர் சட்டத்தில் கைதான 4 பேரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்