கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி வைத்திருந்த 114 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி வைத்திருந்த 114 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-10-13 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி வைத்திருந்த 114 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாட்டுத்துப்பாக்கிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் பலர் நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் அவற்றை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் துப்பாக்கிகள் யாரும் வைத்துள்ளார்களா? என்று கண்காணித்து வந்தனர்.

114 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்

இந்த நிலையில் கிருஷ்ணகிரி அகசிப்பள்ளி ஊராட்சி அலுவலகம் அருகே, குருபரப்பள்ளி அருகே பீமாணப்பள்ளி வனப்பகுதி, தொடுகனப்பள்ளி, நாரலப்பள்ளி, சாப்பரம் மற்றும், தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி வனப்பகுதிகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 114 நாட்டுத்துப்பாக்கிகளை உரிமம் இன்றி வைத்திருந்தவர்கள் போட்டு சென்றனர்.

இந்த 114 நாட்டுத்துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்