கூடலூர் அரசு பள்ளி மாணவிகள் வெற்றி
கல்வி மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் கூடலூர் அரசு பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.
கூடலூர்
கூடலூர் கல்வி மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான குறுமைய விளையாட்டு போட்டிகள் தொடங்கி உள்ளது. போட்டிகள் 3 மையங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக மாணவிகளுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் கேரம் போட்டி நடந்தது. 14, 17, 19 வயது என 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஜனனி, கரிஷ்மா பாபு ஆகியோர் 19 வயது பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்தனர். 17 வயது பிரிவில் மாணவிகள் தேவதர்ஷினி, குணசுந்தரி 2-வது இடம், 14 வயது பிரிவில் மாணவிகள் சந்தியா, கனிஷ்கா 2-வது இடம் பெற்றனர். வெற்றி பெற்ற கூடலூர் அரசு பள்ளி மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.