கோவில்பட்டியில்ரெயிலில் அடிபட்டு காவலாளி பலி

கோவில்பட்டியில்ரெயிலில் அடிபட்டு காவலாளி பலியானார்.

Update: 2022-09-29 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி ரெயில்நிலையம் அருகே வேலாயுதபுரம் ரெயில்வே தண்டவாள பகுதியில், ரெயிலில் அடிபட்டு முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக, தூத்துக்குடி ெரயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ரெயிலில் அடிபட்டு பலியானவர் கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் மாரியப்பன் (வயது 62) என்பது தெரிய வந்தது. தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்