ஆம்புலன்சில் பெண்ணுக்கு 'குவா குவா'

லாலாபேட்டை அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.;

Update: 2023-09-05 18:00 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா அக்ராவரம் கிராமத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மங்கள் மற்றும் அவருடைய மனைவி கப்ரா (வயது 37) வசித்து வருகின்றனர்.

இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கப்ராவிற்கு இன்று அதிகாலையில் பிரவசவலி ஏற்பட்டது. இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து திருவலம் பகுதியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் ஒன்று அந்த கிராமத்துக்கு சென்றது.

பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த கப்ராவை ஆம்புலன்சில் எற்றிக்கொண்டு லாலாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி சென்றனர். மலைமேடு அருகே செல்லும் போது பிரசவவலி அதிகரித்தது.

அதனால் வேறு வழியின்றி மருத்துவ உதவியாளர் பிரியா ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தும்படி டிரைவர் சசிக்குமாரிடம் கூறினார்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் சாலையோரமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கப்ராவிற்கு மருத்துவ உதவியாளர் பிரியா பிரசவம் பார்த்தார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் தாயும், குழந்தையும் லாலாப்பேடடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்