ஜி.டி.என். கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் நடந்தது.

Update: 2023-02-10 19:00 GMT

திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது. இதனை ஜி.டி.என். கல்லூரி முதல்வர் பாலகுருசாமி, கல்வி இயக்குனர் மார்க்கண்டேயன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 3 பிரிவுகளில் நடந்த இந்த கண்காட்சியில் மொத்தம் 146 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை வைத்திருந்தனர்.

குறிப்பாக, ரோபர்ட், சோலார் மூலம் மின் உற்பத்தி, காய்கறிகளில் இருந்து மின்சாரம் தயாரித்தல், விவசாய வேலைகளை எளிதாக்கும் கருவிகள் மற்றும் மனித உடல் செயல்பாடுகள் குறித்த படைப்புகள் அனைவரையும் கவர்ந்தது. இதில் அரசுப்பள்ளி பிரிவில், பழைய வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், பழனி அரசு பள்ளி அணி 2-வது இடமும் பிடித்தன. அரசு உதவிபெறும் பள்ளிக்கான பிரிவில் திண்டுக்கல் சாவித்திரி வித்யாலயா பள்ளி முதலிடமும், கொசவப்பட்டி புனித அந்தோணியார் பள்ளி 2-வது இடமும் பெற்றன.

இதேபோன்று தனியார் பள்ளிகளுக்கான பிரிவில் திண்டுக்கல் சவுந்திரராஜா வித்யாலயா பள்ளி முதலிடமும், பழனி பாரத் வித்யா பவன் பள்ளி 2-வது இடமும் பெற்றன. இவையில்லாமல் 3 பிரிவுகளிலும் 3-வது இடத்தையும் சில பள்ளிகள் பிடித்தன. வெற்றிபெற்ற பள்ளிகளுக்கு ஜி.டி.என். கல்லூரி தாளாளர் ரெத்தினம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். முதல் பரிசாக ரூ.6 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் 3-வது பரிசாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் தலா ரூ.300 வழங்கப்பட்டது. இதில் முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், கல்லூரி இயக்குனர் துரைரெத்தினம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் பாண்டீஸ்வரன் வரவேற்றார். முடிவில் விலங்கியல்துறை உதவி பேராசிரியர் ஜீவலதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்