தனியார் நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை

ஆம்பூர் அருகே தனியார் நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Update: 2023-06-28 12:06 GMT

ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் ஊராட்சி பாங்கிஷாப் பகுதியில் 2 இடங்களில் தோல் மற்றும் தோல் பொருள்கள் விற்பனை செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு ஜி.எஸ்.டி. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் திடீரென வந்தனர். அப்போது 2 இடங்களிலும் நிறுவனத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து ஆம்பூர் சிக்கந்தர் திப்பு தெருவில் உள்ள அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அங்குள்ள அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அந்த நிறுவனத்தின் விற்பனை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். நிறுவனத்தின் பணியாளர்களிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் சுமார் 4 மணி நேர சோதனைக்கு பிறகு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். வரி ஏய்ப்பு காரணமாக சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்வத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்