ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பட்டாசு தொழில் அழிந்து வருகிறது

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பட்டாசு தொழில் அழிந்து வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.;

Update: 2022-07-04 19:30 GMT

அருப்புக்கோட்டை,

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பட்டாசு தொழில் அழிந்து வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

பொதுக்கூட்டம்

அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அரசியல் விளக்கம் மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் காத்தமுத்து தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக நகர் மற்றும் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலா ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சம் கட்சி நிதியாக பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.

பட்டாசு தொழில்

கூட்டத்தில் மாநிலக்குழுசெயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

பா.ஜ.க. கோடிக்கணக்கில் செலவு செய்து கூட்டத்தை கூட்டுகிறது. அமித்ஷாவின் பேச்சை கேட்டு அண்ணாமலை ஆடிக்கொண்டிருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அச்சுத்தொழில், பட்டாசு தொழில், நெசவுத்தொழில் அழிந்து வருகிறது. மத்திய அரசு சிறு, குறு தொழில்களை அழித்து கார்ப்ரேட்டை வளர்த்து வருகிறது

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தாமஸ், முத்துக்குமார், முருகன், மாவட்ட குழு பூங்கோதை, அன்புச்செல்வன், ஜெயபாரத், ஒன்றிய செயலாளர் கணேசன், காரியாபட்டி தாலுகா செயலாளர் அம்மாசி, திருச்சுழி தாலுகா செயலாளர் மார்க்கண்டேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்