6 சதவீத ஜி.எஸ்.டி. உயர்வை அரசு ஏற்க வேண்டும்

Update: 2022-08-13 16:11 GMT


தமிழகத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளின் ஒப்பந்ததாரர்கள் செலுத்த வேண்டிய 6 சதவீத ஜி.எஸ்.டி. வரி உயர்வை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஜெகநாதன் கூறினார்.

பொதுக்குழு கூட்டம்

பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா திருப்பூர் மையம் சார்பில் 2-வது மாநில அளவிலான மேலாண்மைக்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று கணியாம்பூண்டியில் உள்ள திருப்பூர் பில்டர்ஸ் சென்டரில் நடைபெற்றது. பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா திருப்பூர் மைய தலைவர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். விழா தலைவர் ஜெயபாலன், செயலாளர் ரமேஷ்குமார், பொருளாளர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் ஜெகநாதன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் சந்திரசேகரன், தெற்கு மண்டல துணை தலைவர் வேதானந் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

6 சதவீதம் ஜி.எஸ்.டி. உயர்வால் பாதிப்பு

பின்னர் மாநில தலைவர் ஜெகநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு ஒப்பந்ததாரர்களுக்கும், தனியார் பொறியாளர்களுக்கும், கட்டுமானர்களுக்கும் மத்திய அரசு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதமாக உயர்த்திவிட்டது. இதனால் சாமானிய மக்களால் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒப்பந்தாரர்கள் செய்து வரும் பணிகளுக்கான 6 சதவீத ஜி.எஸ்.டி. உயர்வு தொகையை தமிழக அரசே வழங்க வேண்டும்.

ஒப்பந்த உடன்படிக்கையின்போது 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்ட நிலையில் அதன்பிறகு 6 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஒப்பந்ததாரரும் கூடுதல் பணத்தை அவர் கையில் இருந்துதான் கட்ட வேண்டியிருக்கிறது. இதனால் அவர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு சிரமம் ஏற்படும்.

ஒழுங்குமுறை ஆணையம்

முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட பொதுப்6 சதவீத ஜி.எஸ்.டி. உயர்வை அரசு ஏற்க வேண்டும்பணித்துறை ஒப்பந்தாரர்கள் பதிவு முறையை அரசு அதிகாரிகள், அனைத்து துறை தலைமை பொறியாளர்கள் சரிவர செயல்படுத்தவில்லை. அதை நிவர்த்தி செய்ய வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விலையேற்றம், இறக்கத்துக்கான ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும். விலையேற்றம், இறக்கத்துக்கு ஏற்ப தமிழக அரசு ஒப்பந்தாரர்களுக்கு விலை உயர்வு பிரிவு என்ற விதி உள்ளது. அதை அரசு அதிகாரிகள், அந்தந்த துறையை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி பெற்றுத்தருவதில் காலதாமதம் செய்கிறார்கள். அதையும் சரிவர நிகழ்த்த வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கான இழப்பீடு தொகை பல்லாயிரம் கோடி ரூபாய் அரசு கணக்கில் உள்ளது. அதையும் சீர்படுத்தி செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்