மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி
200 வினாடி இலக்கை கடந்து என்ஜின் வெற்றிகரமாக இயக்கி சோதனை நடத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.;
பணகுடி,
நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின் தயாரிக்கப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் ஏ-17 என்ஜினின் முதல்கட்ட சோதனை 200 வினாடிகள் நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி நேற்று மாலையில் மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்கியராஜ் முன்னிலையில், ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் கிரையோஜெனிக் ஏ-17 என்ஜின் சோதனை நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 200 வினாடி இலக்கை கடந்து என்ஜின் வெற்றிகரமாக இயக்கி சோதனை நடத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.