நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வுக்கான மாதிரி தேர்வு 2 நாட்கள் நடக்கிறது
நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வுக்கான மாதிரி தேர்வு 2 நாட்கள் நடக்கிறது
நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வுக்கான மாதிரி தேர்வு 2 நாட்கள் நடைபெற இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாதிரி தேர்வு
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜூலை மாதம் 24-ந் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 7,301 பணிக்காலியிடங்கள் கொண்ட குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு முன்மாதிரி தேர்வாக நாமக்கல் மாவட்ட அளவில் வருகிற 10 மற்றும் 17-ந் தேதிகளில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.
குரூப்-4 தேர்வுக்கான இலவச 2 முன்மாதிரி தேர்வுகள் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வின் அசல் வினாத்தாட்கள் போலவே 100 பொதுத்தமிழ் வினாக்கள் மற்றும் 100 பொது அறிவியல் வினாக்களை உள்ளடக்கியது ஆகும்.
பதற்றம் நீங்கும்
இந்த முன்மாதிரி தேர்வில் மாணவர்கள் பங்கேற்பதன் மூலம் தேர்வு அறையில் ஏற்படும் சந்தேகங்களான ஓ.எம்.ஆர்.ஷீட் நிரப்புதல், ஓ.எம்.ஆர். ஷீட் சேடு செய்தல், வினாக்களை எதிர்கொள்ளும் முறை, தேர்வு பற்றிய சந்தேகம் குறித்து தெளிவுப்படுத்தி கொள்வதால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 தேர்வில் எவ்வித பதற்றமும் இன்றி அரசு பணியை எளிதில் அடையலாம்.
இம்மாதிரி தேர்வில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் மாதிரி தேர்வு நடைபெறும் அன்று காலை 9 மணிக்குள் ஆதார் அட்டை நகல் –1, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ– 1 மற்றும் இத்துடன் 10.7.2022 அன்று நடைபெற உளள மாதிரி தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், ஹால்டிக்கெட் நகல் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.