குரூப்-2 இலவச மாதிரி தேர்வு
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குரூப்-2 இலவச மாதிரி தேர்வு நடந்தது.;
நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். அதன்படி குரூப்-2 முதற்கட்ட தேர்வில் தேர்வானவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நேற்று காலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு கூட்டரங்கில் குரூப்-2 முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 60 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதனை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் மரியசகாய அந்தோணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.