நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 27,884 பேர் எழுதினர் 3,975 பேர் தேர்வுக்கு வரவில்லை

நாமக்கல் மாவட்டத்தில் 105 மையங்களில் குரூப்-2 தேர்வை 27,884 பேர் எழுதினர். 3,975 பேர் தேர்வுக்கு வரவில்லை.

Update: 2022-05-21 16:32 GMT

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் 105 மையங்களில் குரூப்-2 தேர்வை 27,884 பேர் எழுதினர். 3,975 பேர் தேர்வுக்கு வரவில்லை.

குரூப்-2 தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- 2, குரூப்- –2 ஏ பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு 105 மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 31,859 தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 3,975 பேர் தேர்வுக்கு வரவில்லை. மீதமுள்ள 27 ஆயிரத்து 884 பேர் தேர்வு எழுதினர். இது 87.5 சதவீதம் ஆகும்.

நாமக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வு நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு என 3 தாலுகாக்களில் நடைபெற்றது. நாமக்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 50 தேர்வு மையங்களில் 13,413 தேர்வர்களும், ராசிபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 29 தேர்வு மையங்களில் 7,584 தேர்வர்களும், திருச்செங்கோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 26 தேர்வு மையங்களில் 6,886 தேர்வர்களும் என மொத்தம் 27,884 தேர்வர்கள் தேர்வு எழுதினர்.

கலெக்டர் ஆய்வு

நாமக்கல் செல்வம் என்ஜினீயரிங் கல்லூரி, களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த தேர்வுகளின் கண்காணிப்பு பணிகளில் 20 தேர்வர்களுக்கு தலா ஒரு அறை கண்காணிப்பாளரும், 105 தேர்வு மையங்களிலும் தலா ஒரு முதன்மை கண்காணிப்பாளர்களும், தேர்வு மையத்திற்கு தலா 2 ஆய்வு அலுவலர்கள் என 210 ஆய்வு அலுவலர்களும், துணை கலெக்டர்கள் நிலையிலான அலுவலர்கள் கொண்ட 11 பறக்கும் படையினரும் ஈடுபட்டனர். மேலும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் நிலையிலான அலுவலர்கள் கொண்ட 30 நடமாடும் குழுவினரும் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்