நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்

ஜனவரி 1-ந்தேதி முதல் ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்படுவதுடன், பயண நேரமும் குறைகிறது.

Update: 2024-12-21 00:14 GMT

நெல்லை,

நெல்லை எக்ஸ்பிரஸ்

இந்திய ரெயில்வே சார்பில் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பல்வேறு ரெயில்களின் புறப்படும் நேரம், வந்து சேரும் நேரம் ஆகியவை மாற்றம் செய்யப்பட்டு, புதிய கால அட்டவணை வௌியிடப்பட்டு உள்ளது. இதில் நெல்லை -சென்னை இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி நெல்லையில் இருந்து தினமும் இரவு 8.05 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 12632) இரவு 8.40 மணிக்கு புறப்படுகிறது. சென்னை எழும்பூருக்கு வழக்கம்போல் காலை 7 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12631) இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, நெல்லைக்கு வழக்கம்போல் காலை 6.40 மணிக்கு வந்து சேருகிறது. இதன் மூலம் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் 30 நிமிடங்கள் குறைகிறது.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் 8.40 மணியாக மாற்றப்பட்டு உள்ளதால், செங்கோட்டையில் இருந்து வருகிற 1-ந்தேதி முதல் மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு இரவு 8.15 மணிக்கு வரும் பாசஞ்சர் ரெயிலில் (வண்டி எண் 56744) நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை பிடிப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்