சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலைக்காய் ரூ.2 லட்சத்துக்கு ஏலம்
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலைக்காய் ரூ.2 லட்சத்துக்கு ஏலம் போனது.
நொய்யல் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ெணய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 31.82 குவிண்டால் எடை கொண்ட 89 மூட்டை நிலக்கடலைக்காய் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.67.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.58.06-க்கும், சராசரி விலையாக ரூ.64.81-க்கும் என 89 மூட்டை நிலக்கடலைக்காய் ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 156-க்கு விற்பனையானது.