விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டும் இடம் ஆய்வு

விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டும் இடத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.ஆய்வு நடத்தினார்.

Update: 2023-10-19 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தாமிரபரணி நீரை ஆதாரமாகக் கொண்ட கூட்டு குடிநீர் திட்டத்தில் 2.65 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொட்டி கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தூத்துக்குடி கிராம குடிநீர் திட்ட கோட்ட பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் கங்காதரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், விளாத்திகுளம் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்