முசிறியில் புதிய நகராட்சி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

முசிறியில் புதிய நகராட்சி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

Update: 2022-10-23 19:11 GMT

முசிறி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், ஸ்டாலின் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முசிறி நகராட்சி தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் வரவேற்றார். விழாவில் அமைச்சர் கே.என்.நேரு குத்துவிளக்கு ஏற்றி அடிக்கல் நாட்டினார். நகராட்சி புதிய அலுவலக கட்டிடத்தில் தரைதளத்தில் 6,860 சதுர அடியில் ஆணையர் அறை, பொதுப்பிரிவு, வருவாய் பிரிவு, பொது சுகாதார பிரிவு, அலுவலக கூட்ட அரங்கம், கணினி பிரிவு ஆகியவை கொண்டதாகவும், முதல் தளத்தில் 6,400 சதுர அடியில் நகர் மன்ற தலைவர் அறை, பொறியாளர் அறை, நகரமைப்பு பிரிவு மற்றும் நில அளவை பிரிவு உள்ளிட்ட அறைகள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. விழாவில் நகர செயலாளர் சிவக்குமார், நகராட்சி பொறியாளர் தாண்டவ மூர்த்தி (பொறுப்பு), நகர மன்ற ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி துணை தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்