தி.மு.க. அலுவலக புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
வீரவநல்லூரில் தி.மு.க. அலுவலக புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் பஸ்நிலையம் அருகே நகர தி.மு.க. அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவிற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டினார். நகர செயலாளர் சுப்பையா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி என்ற பிரபு, முத்துகிருஷ்ணன், சேரன்மாதேவி யூனியன் தலைவர் பூங்கோதை குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சீவலமுத்து என்ற குமார், சேரன்மாதேவி கூட்டுறவு பண்டகசாலை துணை தலைவர் டேவிட் ஸ்டீபன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் இளைஞர் அணி வேல்முருகன், தொண்டரணி சுபாஷ், வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா, துணை தலைவர் வசந்த சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.