ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
கொரடாச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 395.66 சதுர மீட்டர் பரப்பளவில் புதிதாக கட்டப்பட உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார். இதில் ஒன்றியக்குழுத்தலைவர் உமாபிரியா, துணைத்தலைவர் பாலசந்தர், பேரூராட்சி மன்றத்தலைவர் கலைச்செல்வி, துணைத்தலைவர் தளபதி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி, செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் மலர்செல்வி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.