புதுமாப்பிள்ளை தற்கொலை

திண்டுக்கல் அருகே விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-07-04 15:37 GMT

திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் பிரிட்டோ ஜியோபிரி (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். அவருடைய மனைவி செலன்பிரபா (26). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. பிரிட்டோ ஜியோபிரி, கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பிரிட்டோ ஜியோபிரி நேற்று முன்தினம் அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்