புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
வடமாநிலத்தை சேர்ந்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 25). இவர் புதுக்கோட்டையில் சாந்தநாதபுரத்தில் ஒரு விடுதியில் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஆனந்த் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.