திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை

நாகர்கோவிலில் திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-09-23 20:53 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுமாப்பிள்ளை

நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 35), தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுமாப்பிள்ளையான ஆனந்தகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனை சித்ரா கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் திருந்தவில்லை.

சம்பவத்தன்று வீட்டிற்கு அவர் மதுபோதையில் வந்துள்ளார். இதனால் சித்ரா கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

தற்கொலை

இதனை தொடர்ந்து மனவேதனையில் இருந்த ஆனந்தகுமார் நேற்று முன்தினம் வட்டவிளை பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலின் பின் பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்