மளிகை கடைக்காரர் கைது

100 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்த மளிகை கடைக்காரர் கைது

Update: 2023-10-17 13:07 GMT

வீரபாண்டி

வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அய்யம்பாளையம் பிரிவில் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பிச்செல்ல முயன்றார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாணையில் அவர் திருப்பூர் பொல்லிகாளிபாளையத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது44) என்பதும், அவர் கொண்டு வந்த சாக்குப்பையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இவர் புகையிலைப்பொருட்களை தனது மளிகை கடையில் வைத்து விற்பனை செய்து வந்ததும், மற்ற கடைகளுக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 100 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்