குட்கா விற்ற மளிகை கடைக்காரர் கைது

குட்கா விற்ற மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-16 20:18 GMT

கொண்டலாம்பட்டி:-

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி இளந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). இவர் அந்த பகுதியில் பீடா கடையுடன் மளிகை கடையும் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கவுரி ஆகியோர் அந்த வழியாக ரோந்து சென்றனர். இந்த நிலையில் சக்திவேல் குட்கா விற்பதை நோட்டமிட்ட போலீசார் அவரது கடையை சோதனையிட்டனர். அங்கு 40-க்கும் மேற்பட்ட சிறிய ரக குட்கா பாக்கெட்டுகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் குட்கா விற்றதாக சக்திவேலை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்