கார் மோதி மளிகைக்கடைக்காரர் பலி

கார் மோதி மளிகைக்கடைக்காரர் பலியானார்.

Update: 2023-08-29 19:31 GMT

அரிமளம் அருகே வம்பரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவர் வம்பரம்பட்டி கிராமத்தில் மளிகைக் கடை வைத்து நடத்தி வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை தனது மளிகை கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வம்பரம்பட்டியிலிருந்து கே.புதுப்பட்டி கடைவீதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கே.புதுப்பட்டி செங்கல் சூளை அருகே வந்தபோது, அந்த வழியாக கே.புதுப்பட்டியில் இருந்து காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த காரும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் கார் டிரைவர் பேராவூரணி அருகே பூக்கொல்லை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த கருப்பையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்