கணவர் இறந்த துக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை

களக்காடு அருகே, கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-07 18:45 GMT

களக்காடு:

களக்காடு அருகே, கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

4 குழந்தைகளின் பெற்றோர்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் முத்துநகரை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி தமிழ்செல்வி (45). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன் குமார் விபத்தில் பலியானார்.

கணவர் இறந்ததில் இருந்து தமிழ்செல்வி மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் வேதனைப்பட்டார்.

தீக்குளித்து தற்கொலை

நேற்று முன்தினம் மாலை தமிழ்செல்வி வீட்டில் இருந்தார். அப்போது திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவர் வலிதாங்க முடியாமல் அலறினார்.

இதை அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து அவரை மீட்டனர். பின்னர் நெல்லை அரசு மருத்துமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி தமிழ்செல்வி பரிதாபமாக இறந்தார்.

சோகம்

இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவர் இறந்த துக்கத்தில் 4 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்