ஊரக குடியிருப்பு திட்ட குறைகளை தெரிவிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக குடியிருப்பு திட்ட குறைகளை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.;

Update: 2023-07-31 19:45 GMT

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்ட குறைதீர்ப்பாளராக ஓம்பிரகாஷ் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பிரதம மந்திரியின் ஊரக குடியிருப்பு திட்டம் தொடர்பான புகார்களுக்கும் அவரே குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் தொடர்பாக குறைகள், புகார்களை 89258 11306 என்ற செல்போன் எண் அல்லது ombudsmandrdadgl@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் அனுப்பலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்